FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 செய்திகள் - நேரலை

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026
பகிர்:
Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:09 pm IST

வேளாண் பட்ஜெட் நிறைவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், 130 நிமிடங்கள் உரையாற்றினார்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:35 am IST

நன்னெறி சாகுபடி

  • நஞ்சற்ற உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதிக்காக ரூ.8.42 கோடி நிதி ஒதுக்கீடு.

  • தென்னை சிறப்பு திட்டத்திற்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு.

    Advertisement

    Advertisement

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:35 am IST

வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம்

  • வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம் திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம். செங்குத்து தோட்டம், நிழல்வலை குடில்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

  • தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம். இத்திட்டத்திற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

  • தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக்குடில், நிழல்வலை குடில், நிரந்தர பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டு கொடுத்தல் உள்ளிட்டவை வழங்கி விவசாயிகளுக்கு உதவப்படும்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:35 am IST

அஞ்சலை அம்மாள் விருது

  • அஞ்சலை அம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

  • திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு.

  • 17,315 ஏக்கர் விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு.

  • பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:35 am IST

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்பு

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி நிதி.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:33 am IST

131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு

2026-27 ஆம் ஆண்டில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம். மண்வள பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ.122.51 கோடி நிதி ஒதுக்கீடு.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:33 am IST

நம்மாழ்வார் விருது

  • ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு.

  • மூன்று புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு.

  • கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காக கறும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:33 am IST

ரூ.6 கோடியில் மண்வள அட்டை

தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் செய்யப்படும். உழவர் அடையாள அட்டை பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை வழங்கப்படும்.

  • புதிய இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

  • நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்துக்கு மாநில அரசின் சிறப்பு திட்டத்துக்கு ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு.

  • உழவர் செய்யறிவு திட்டம்(ஏஐ) செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

  • சாமை, திணை, வரகு உள்ளிட்ட தமிழ்நாடு குறுதானிய இயக்கம் தொடங்கப்படும். இதற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு.

  • மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

  • பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவு இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு.

  • பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.

  • அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும்.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பாம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு.

  • விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 11:33 am IST

வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையங்கள்!

தமிழ்நாட்டில் 5 இடங்களில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 10:22 am IST

தரமான விதை! வளமான விவசாயம் !

நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டத்துக்கு ரூ. 34.72 கோடி ஒதுக்கீடு

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 10:22 am IST

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்!

மண்ணின் வளத்தை பாதுகாக்க "தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம் - வளமான மண்; வளமான வருங்காலம்! -க்காக ரூ.122.51 கோடி ஒதுக்கீடு.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 9:55 am IST

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம்: ரூ.7,432 கோடி ஒதுக்கீடு 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 9:34 am IST

கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள்!

உதயநிதி ஸ்டாலின் கைது, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 8:29 am IST

பயிர்க்கடன் 100% தள்ளுபடி செய்யப்படுமா? 

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முதலில் ரூ. 50,000 வரையிலும், அதனைத்தொடர்ந்து ரூ. 75,000 வரையிலும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. பயிர்க்கடன் 100% தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 8:29 am IST

வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆக. 5) தொடங்கியது. முதல் நாளில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 8:29 am IST

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று காலைதாக்கல்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று (ஆக. 6) காலை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத் தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments