FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பிகாரில் தனியார்மயமாகும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள்!

பிகாரில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு-தனியார் பங்களிப்பு முறையில் நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 11:48 am IST
பிகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி - IANS
பகிர்:

பிகாரில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், அரசு-தனியார் பங்களிப்பு முறையில் இயக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிகாரில் கடந்த தேர்தலில் நிதீஷ் குமார் தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த நிலையில், அவர் மாநிலங்களவை உறுப்பினராக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதல்வரானார். இந்நிலையில் பிகாரில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

அதாவது தற்போது பிகாரில் பல் மருத்துவமனைகள் உள்பட 16 அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை 'அரசு - தனியார் பங்களிப்பு' (PPP) முறையில் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ சேவைகளை வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பரிவர்த்தனை ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூபர்ஸ் (PWC) என்ற தனியார் நிறுவனத்துக்கு ரூ. 8.27 கோடி நிதி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

summary

Bihar Cabinet Approves PPP Model for 16 Medical Colleges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments