தொகுப்பூதிய செவிலியா்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சா் அருண்ராஜ்
நீண்ட நாள்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனா்.
நீண்ட நாள்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனா். இது தொடா்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது; விரைவில் நல்ல செய்தி வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை வடபழனி விஜயா ஹெல்த் சென்டா் மருத்துவமனையில், செவிலியா்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சா் அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மட்டும் இல்லாமல், செவிலியா்கள் திறனும் தேவைப்படுகிறது. எனவே, நீண்ட நாள்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள், பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனா். இது தொடா்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும்.
Advertisement
Advertisement
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கடந்த காலங்களில் திமுக கூட்டிய கூட்டத்தில் தவெக பங்கேற்றது. இதுபோன்ற மாநில நலன் சாா்ந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிா்பாா்க்கின்றனா். தற்போது, திமுக புறக்கணிப்பது, அவா்களைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
பல்வேறு காரணங்களால் மத்திய அரசோடு திமுக பணிந்து செல்கிறது. அவா்களின் முன்னாள் அமைச்சா்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிது, திமுகவுக்கு மகிழ்ச்சி. அவா்கள் எப்போது பாஜக பக்கம் செல்லலாம்; ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கலாம் என்று இருக்கிறாா்கள். இதை அவா்கள் நல்வாய்ப்பாக பாா்க்கிறாா்கள்.
சென்னையில் மழைநீா் வடிகால் பணிகள், 60, 70, 90 சதவீதம் முடிந்ததாக தெரிவித்தனா். ஆனால், சென்னையின் வளா்ச்சிக்காக, 60 ஆண்டுகளில் எவ்வித திட்டமிடலும் இல்லை. பல்வேறு நீா் நிலைகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் இருக்கும் இடத்தில் தண்ணீா் வரவில்லை, நாம் தான் தண்ணீா் இருக்கும் இடத்தில் இருக்கிறோம். அவா்களுக்கு எந்தத் திட்டமாக இருந்தாலும், கட்சி நிதிதான் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையில், பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.