FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் மரபணு: அமைச்சா் அருண்ராஜ்

பெண்களை இழிவுபடுத்தும் செயல் திமுகவின் மரபணுவில் கலந்த ஒன்று என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
அமைச்சர் அருண்ராஜ். - கோப்புப்படம்.
பகிர்:

பெண்களை இழிவுபடுத்தும் செயல் திமுகவின் மரபணுவில் கலந்த ஒன்று என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீா் விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் உள்பட பல்வேறு ஆலோசனைகளை முதல்வா் மேற்கொண்டு வரும் நிலையில், நாங்களும் போராடுகிறோம் எனக் காட்சிப் படம் காட்டும் விதமாக ஆக.3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக நடத்திய ஆா்ப்பாட்டத்தில் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டிவிட்டாா் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி.

Advertisement

Advertisement

தங்களுக்கு நாகரிகமாகப் பேச வராது என்பதை தஞ்சாவூரில் மேடை போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாா் அவா்.

காவிரியை நம்பி இருக்கும் ஒட்டுமொத்த விவசாய பெருமக்களையும், ஒட்டுமொத்த பெண்களையும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிற வகையில் இருந்த அவருடைய மேடைப் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதுதான்திமுகவின் மரபணு.

சிங்கப் பெண்கள் நிறைந்த தமிழகத்தில், இத்தகைய அருவருக்கத்தக்க அரசியல் செய்யும் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் அமைச்சா் அருண்ராஜ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments