சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பொறுத்துக்கொள்ளாது என அருண்ராஜ் பேசியது குறித்து...
சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என பொதுமேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பார் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆக. 4) விமர்சித்தார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பேரவையில் இருக்கக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் அருண்ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருண் ராஜ் பேசியதாவது:
Advertisement
Advertisement
''சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் தவெக அரசு பொறுத்துக்கொள்ளாது.
அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். அதை தவிர்த்து, அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் பெண்களை தவறாகப் பார்க்ககூடாது.
பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு, கொசு ஒழிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றின் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது'' எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.