FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குற்றச் சம்பவங்கள் அதிகரிப்புக்கு இரண்டு காரணங்கள்: அமைச்சர் அருண்ராஜ்

மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர் அருண்ராஜ் பேசியது பற்றி...

26 வினாடிகள் முன்பு
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

போதை கலாசாரமும் காவல்துறையில் அரசியல் தலையீடும்தான் குற்றச் சம்பவங்களின் அதிகரிப்புக்குக் காரணம் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

நாமக்கலில் செய்தியாளர்களுடன் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது, கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பது மக்களுக்கே தெரியும். அண்ணா பல்கலை. விவகாரம், கோவையில் நடந்த விவகாரத்தில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாத சூழல்தான் இருந்தது.

Advertisement

Advertisement

இந்தக் குற்றங்களுக்கு இரண்டு காரணம். இந்தக் குற்றங்களெல்லாம் ஒரு நோயின் அறிகுறிதான்.

பெருகியிருந்த போதை கலாசாரத்தின் அறிகுறிதான் இது. மற்றொன்று, காவல்துறைக்கு போதிய அதிகாரம் வழங்காமல் அரசியல் தலையீடு இருந்தது. காவல்துறையினர் சுதந்திரத்துடன் செயல்படாமல் இருந்ததால்தான் குற்றச் செயல்கள் அதிகரித்தன.

குற்றச் சம்பவங்களை தவெக அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது என்று தெரிவித்தார்.

summary

Drug culture and political interference in the police force are the reasons for the rise in criminal incidents, says Minister Arunraaj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.