FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை: அமைச்சர் அருண்ராஜ்

பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருப்பது பற்றி...

16 நவம்பர் 2026, 2:00 pm
அமைச்சர் அருண்ராஜ்
பகிர்:

பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்:

"ரூ. 46.53 கோடியில் வேலூர் மாவட்டத்தில் புதிய செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு அதற்கான சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏழு கோடி ரூபாய்க்கு புதிய மருத்துவப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடலூரில் பறவைக் காய்ச்சல் தொடர்பாகத் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27 நபர்களுக்குப் பரிசோதனை எடுத்ததில் 23 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. தொற்று பாதித்த 5 கிலோ மீட்டர் சுற்றளவில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறோம்.

கோழிப் பண்ணையில் பணியாற்றிய 54 பேருக்கும், 24 கால்நடைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். இதுவரை மனிதர்களுக்கு எந்தவிதப் பரவலும், பாதிப்பும் இல்லை. தீவிரமாக ஒருங்கிணைந்து பறவைக் காய்ச்சலைக் கண்காணித்து, மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

புற்றுநோய்க்கான நான்கு மண்டல அளவிலும் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவர்கள் தனியார் கிளினிக்கில் பணியாற்றுவதற்குத் தடை இல்லை. ஆனால், பணி நேரத்தில் அவர்கள் முறையாகப் பணி செய்ய வேண்டும் என்பதைத்தான் அறிவுறுத்துகிறோம். 104 என்ற எண்ணில் மக்கள் மருத்துவத் துறை சார்ந்த புகார்களைத் தெரிவிக்கலாம்.

வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடான தாய்லாந்தில் மருத்துவச் சேவை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தோம். அங்கு ஆரம்ப மருத்துவத்தை எந்த வகையில் கையாளுகிறார்கள் என்பதை ஆய்வு செய்துவிட்டு வந்தோம். அங்கு நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது போன்ற பல விஷயங்களை அங்கு ஆய்வு செய்து வந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

summary

"Minister Arun Raj stated that no humans have been affected by bird flu so far.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.