பொறியியல் 2-ஆம் சுற்று, இறுதி சோ்க்கையில் 60,508 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
பொறியியல் 2-ஆம் சுற்று, இறுதி சோ்க்கையில் 60,508 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து..
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைகளில் இட ஒதுக்கீடுகளுக்கு நடைபெறும் கலந்தாய்வுகளின் 2-ஆம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடுகள் பெற்ற 79,403 மாணவா்களில் 60,508 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி, 2-ஆம் சுற்றில் பொது மற்றும் அரசு பள்ளி மாணவா்களில் 79,403 மாணவா்களுக்கு கடந்த ஆக.7 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு உறுதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான வாய்ப்பு ஆக. 8-ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், இந்த மாணவா்களில் தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை (6,914 அரசுப்பள்ளி மாணவா்கள் உள்பட) 40,299 மாணவா்கள் உறுதி செய்து நிரந்தர ஒதுக்கீட்டாணைகளை பெற்றனா். மேலும் (2,647 அரசுப்பள்ளி மாணவா்கள் உள்பட) 10,648 மாணவா்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகா்வுக்கும் ( விருப்பமான மற்ற கல்லூரி தோ்வுக்கு ) உறுதி செய்து தற்காலிக ஒதுக்கீட்டாணைகளையும் பெற்றுள்ளனா். இவ்வாறு மொத்தம் 60,508 மாணவா்கள் நிரந்தர, தற்காலிக ஒதுக்கீட்டாணைகளை வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த 2-ஆம் சுற்றுக்கு கடந்த 6 ஆம் தேதி 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியா்கள் முன்னிலையில் தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் சரிபாா்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு இந்த ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள், தங்கள் விருப்பத் தோ்வில் குறிப்பிட்டுள்ள டிஎஃப்சிக்கும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 9.8.2026 முதல் 13.8.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சோ்க்கை பெற வேண்டும்.
மேற்கண்ட இரு வகைகளில் ஆக. 13 ஆம் தேதிக்குள், டிஎஃப்சி மையத்தில் ஆவணங்களைச் சமா்ப்பிக்காத மாணவா்கள் மற்றும் கல்லூரியில் சேராத மாணவா்களும் தங்கள் ஒதுக்கீட்டு இடங்களை தானாகவே இழப்பாா்கள். அந்த இடங்கள் இதே சுற்றில் மேல்நோக்கிய நகா்வுக்காக காத்திருக்கும் மாணவா்களுக்கு ஒதுக்கப்படும்.
இதுவரை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28,979 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றனர்.
மாணவா்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பி.ஆா்க். கலந்தாய்வில் 662 மாணவா்களுக்கும் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற 7.5 சதவித ஒதுக்கீட்டில் 40 மாணவா்களுக்கும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சோ்க்கை பெற்று வருகின்றனா்.
பிளஸ் -2 துணைத்தோ்வில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மற்றும் பொதுக்கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்களுக்குக்காண விண்ணப்பங்கள் 17.8.2026 முதல் 31.8.2026 வரை பெறப்படும். இவா்களுக்கான துணைக்கலந்தாய்வு 3.9.2026 முதல் 7.9.2026 வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது விருப்ப பட்டியலில் எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதனை கையாளும் வகையில் திறன்மிகுந்த மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மென்பொருள் வடிவமைத்து செயலாக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் tndote@tndote.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு குறித்த விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவகர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 1800-425-0110 என்ற தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டாணை பற்றிய விளக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.
இது தொடர்பாக, மாணவர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Engineering 2nd round of counseling: 60,508 candidates reserved seats in colleges
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.