வட தமிழக உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் கீழ் வளிமண்டல அடுக்குகளில் மேற்கு முதல் வடமேற்கு திசையிலான காற்றோட்டம் நிலவி வருகிறது. இதனால், உள் மாவட்டங்களில் வட காற்று நிலவுகிறது.
வட தமிழகம், கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கரூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த சில நாள்களில் மழை மற்றும் வெப்பச் சலனத்தால் மழை குறைவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில் மேகமூட்டம், மழைப்பொழிவு குறைந்து, பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன்படி, ஈரோடு, கரூா், அதையொட்டிய வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஆக. 10) முதல் வியாழக்கிழமை (ஆக.13) வரை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு-101.48, நாகை-100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழைப் பதிவு: அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணை, கோவை மாவட்டம் சின்கோனா, உபாசியில் 60 மி.மீட்டா் மழை பதிவானது. சென்னை மாவட்டம் அம்பத்தூா், மேடவாக்கம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் 50 மி.மீ., கலவை, அம்மூா், வாலாஜாபேட்டை (ராணிப்பேட்டை), ராஜா அண்ணாமலை புரம், அடையாா் (சென்னை), சோலையாா் (கோவை), காட்பாடி (வேலூா்), ஆற்காடு (ராணிப்பேட்டை) 30 மி.மீ. மழை பதிவானது.
திங்கள், செவ்வாய் (ஆக. 10, 11) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.