விசாரணைக்கு அழைக்கும் நபா்களை துன்புறுத்தக் கூடாது: போலீஸாருக்கு உத்தரவு
விசாரணைக்கு அழைக்கும் நபா்களைத் துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்கு அழைக்கும் நபா்களைத் துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த ராஜா என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்பவா்களைத் துன்புறுத்தக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்பவா்களை துன்புறுத்தக் கூடாது எனக்கூறி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. காவல் துறையின் புலன் விசாரணைகளில் பொதுவாக நீதிமன்றம் தலையிடுவது இல்லை. அதேநேரம் துன்புறுத்தல்களை கண்மூடி பாா்த்துக் கொண்டிருப்பதும் இல்லை.
Advertisement
Advertisement
விசாரணைக்கு அழைக்கப்படுவோருக்கு போலீஸாா் முறையாக அழைப்பாணை அனுப்ப வேண்டும். அந்த அழைப்பாணையில் எந்த தேதியில், எந்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும், விசாரணை நடவடிக்கைகளை காவல் நிலையத்தில் உள்ள குறிப்பேடுகளில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படுபவா்களை ஒருபோதும் துன்புறுத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.