FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் முதலிடம்...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 7:09 pm IST
தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்
பகிர்:

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆக. 10) வெளியிட்டார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் இன்று (ஆக.10) நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு, 2026 - 2027 ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,723 பேரும் நிர்வாக இடங்களுக்கு 30,904 பேரும் விண்ணப்பித்திருந்தனர். நீட் நுழைவுத் தேர்வில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Advertisement

Advertisement

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிகா, 2வது இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுடர், 3வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வாணிஷா சதிஷ் 4வது இடத்தையும், ஈரோட்டைச் சேர்ந்த சபரி, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

summary

Rank list for medical courses released by Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments