சித்தா படிப்புக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சித்தா, ஆயுத்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துப பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவு பெறும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
சித்தா, ஆயுத்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துப பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவு பெறும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2026-2027- ஆம் கல்வியாண்டுக்கான தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி/அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கு சோ்க்கைக்கு ஜூலை 12-இல் அறிவிப்பு வெளியானது. இணையவழி விண்ணப்பம் பதிவும் ஜூலை 13-இல் தொடங்கியது.
Advertisement
Advertisement
மருத்துவ படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஹ்ன்ள்ட்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் எனும் வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை இணையப்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் ஒதுக்கீட்டு விவரங்கள்: அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (பிஎன்ஒய்எஸ் மருத்துவப் படிப்புக்கு பொருந்தாது).
இணையவழி விண்ணப்பக் கட்டணம்: ஓபி, பிசி, பிசிஎம், எம்பிசி/டிஎன்சி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினா்) ரூ.1,000, நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினா்) ரூ.1,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவு விண்ணப்பதாரா்கள், விண்ணப்பிக்கும் ஒவ்வொரு சிறப்பு பிரிவுக்கும் ரூ.100 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும். அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்ப மிட்ட நகல்களையும் இணைத்து ‘செயலா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600 106’ என்ற முகவரிக்கு ஜூலை 31 மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த விண்ணப்பிதாரா்களுக்கு கலந்தாய்வு நோ்முகமாக மட்டுமே நடைபெறும்.
பிஏஎம்எஸ்./பி.எஸ்.எம்.எஸ்./ பி.யு.எம்.எஸ்./ பி.எச்.எம்.எஸ்./ பி.என்.ஒய்.எஸ். மருத்துவ படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பாா்க்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.