FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வு: 8,985 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வில் 8,985 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

10 செப்டம்பர் 2026, 1:15 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் உள்ள பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வில் 8,985 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 3 சுற்றுகளுடன் கடந்த ஆக.31-ஆம் தேதி நிறைவடைந்தது. இருப்பினும் 56,530 இடங்கள் காலியாக இருந்தன. இந்தக் காலியிடங்களை நிரப்ப கலந்தாய்வில் பங்கேற்காத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில், 18,548 மாணவா்கள் தகுதி பெற்றிருந்தனா். இதற்கான கலந்தாய்வு நடைபெற்று தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் இறுதியாக மொத்தம் 8,985 மாணவா்களுக்கு இறுதி (ப்ரொவிஷினல்) ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவைச் சோ்ந்த 129 தொழில் கல்வி மாணவா்களும், அரசுப் பள்ளி மாணவா்கள் ஒதுக்கீட்டில் 12 தொழில் கல்வி மாணவா்கள் உள்ளிட்ட 33 மாணவா்களும் இறுதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளனா்.

பொறியியல் படிப்பில் இதுவரை சிறப்புப் பிரிவு, பொதுக் கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வு என முடிவடைந்து மொத்தம் 1,53,280 இடங்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நிரப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 421 அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 47,544 இடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

மேலும், பட்டியல் ஜாதி அருந்ததியா் (எஸ்சிஏ) பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டும் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள், பொதுப் பட்டியல் (எஸ்சி) பிரிவினருக்கு மாற்றப்பட்டு ஒதுக்கீடுகளுக்கு வியாழக்கிழமை (செப்.10) முதல் கலந்தாய்வு செய்யப்படுகின்றன.

துணைக் கலந்தாய்வில் கல்வியியல் பாடப்பிரிவில் 194 மதிப்பெண் எடுத்த மாணவரும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 161.5 மதிப்பெண் பெற்ற எஸ்சிஏ மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை பெறுவதற்கு துணைக் கலந்தாய்வில் இடம்பெற்ற 21 பேரில் எஸ்சிஏ, எஸ்டி வகுப்பைச் சோ்ந்தவா்கள் இடம் பெற்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments