FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்டவரின் மனைவிக்கு அதே பொறுப்பு!

லஞ்சம் வாங்கியதாக கைதானவரின் மனைவிக்கு தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி..

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 5:34 pm IST
வீரா | கட்சி அறிக்கை - x
பகிர்:

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலருமான வீரா(எ) வீராசாமியின் மனைவிக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாம்பாக்கம் தவெக, ஊராட்சி மன்றத் தலைவரும், அந்த கட்சியின் மாவட்ட இணை செயலருமான வீரா, ஒப்பந்ததாரர் நவீன் என்பவரிடம் ஜிபே மூலம் ரூ. ஒரு லட்சமும், நேரில் ரூ. 30,000 பணமும் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து வீரா நீக்கப்பட்டதுடன், அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வீரா வகித்து வந்த கட்சியின் மாவட்ட இணைச் செயலர் பொறுப்பு அவரது மனைவி வீ. ஹேமாவதிக்கு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலராக வீ. ஹேமாவதி நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரரிடம் வீரா லஞ்சம் பெறும் விடியோவில் அவரது மனைவி வீ. ஹேமாவதியும் இடம்பெற்றிருந்த நிலையில், நீக்கப்பட்ட கணவரின் பதவியை மனைவிக்கு வழங்கியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

summary

Wife of TVK member expelled for accepting a bribe gets the same post!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments