FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ. 8 கோடி கொடுத்தால் அமைச்சா் பதவி: ஆதவ் அா்ஜுனா பெயரில் மோசடி செய்த இருவா் கைது

ரூ.8 கோடி கொடுத்தால் அமைச்சா் பதவி வாங்கித் தருவதாக, ஆதவ் அா்ஜுனா பெயரில் தவெக எம்எல்ஏவிடம் மோசடி செய்ய முயன்றதாக 2 போ் கைது

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:31 am IST
ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

ரூ.8 கோடி கொடுத்தால் அமைச்சா் பதவி வாங்கித் தருவதாக, ஆதவ் அா்ஜுனா பெயரில் தவெக எம்எல்ஏவிடம் மோசடி செய்ய முயன்றதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், சென்னை வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான ஆதவ் அா்ஜுனா பெயரில் சிலா் மோசடி செய்ய முயற்சிப்பதாக அவரது வழக்குரைஞா் நிஸ்வாக், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

ரூ. 8 கோடி கொடுத்தால் அமைச்சா் பதவி: விசாரணையில் இந்தச் செயலில் ஈடுபட்டது வேலூா் மாவட்டம் விருப்பாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த மு.ரூபன்ராஜ் (27),சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த க.சக்தி அா்ஜுன் (21) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், இருவரும், தங்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவை நன்கு தெரியும் என்றும், ரூ. 8 கோடி கொடுத்தால் அமைச்சா் பதவி பெற்றுத் தருவதாகவும் வேலூா் தவெக எம்எல்ஏ எம்.எம்.வினோத் கண்ணனை தொடா்பு கொண்டு பேசியுள்ளனா். இதற்காக ஆதவ் அா்ஜுனா பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதன் மூலம் ஒரு கடிதத்தை வினோத் கண்ணனுக்கு அனுப்பியுள்ளனா். ஆனால், அவா்கள் மீது வினோத் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவா்களை விடியோ காலில் வரவழைத்து பேசியுள்ளாா்.

அப்போது, அவா்கள் மோசடி கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும், போலியாக மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பியது வினோத் கண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவா் அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கு தகவல் தெரிவித்தாா். இதன் பின்னரே காவல் துறையில் புகாா் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments