இன்னும் ஜெயலலிதாவின் படத்தைதான் வைத்திருக்கிறார் செங்கோட்டையன்; ஆனால் ஓபிஎஸ்..! ராஜ்மோகன்
ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே நடைபெற்ற வாதத்தின்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியது...
இடம் மாறினாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கிறார் செங்கோட்டையன் என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
பேரவையில் இன்றைய நிகழ்வில்,
ஓபிஎஸ் இடம் மாறி இருக்கிறார், அதற்காக இவ்வளவு துதி பாடத் தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு 'முதலில் இடம் மாறியது செங்கோட்டையன்தான்' என்று திமுக எம்எல்ஏ ஓபிஎஸ் கூறினார்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஓபிஎஸ்ஸின் பேச்சுக்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பதிலளித்தனர்.
அப்போது அமைச்சர் ராஜ்மோகன், "அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறியபோதும் அவரின் இதயத்திற்கு அருகில் இருக்கும் நிழல் படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்.
ஆனால் அண்ணன் ஓபிஎஸ் பாக்கெட்டை பார்க்கும்போது இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்றே தோன்றுகிறது" என்றார்.
அப்போது அமைச்சர் ராஜ்மோகன், "அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறியபோதும் அவரின் இதயத்திற்கு அருகில் இருக்கும் நிழல் படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்.
ஆனால் அண்ணன் ஓபிஎஸ் பாக்கெட்டை பார்க்கும்போது இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்றே தோன்றுகிறது" என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறி இருக்கலாம், ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை இன்னும் சட்டைப்பையில் வைத்திருக்கிறார். ஆனால், ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர், அவருடைய சட்டைப்பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்" என்றார்.
பின்னர் ஓபிஎஸ், "அமைச்சர்களுக்கு பதிலளிக்க நேரம் இருக்கிறது. நான் பேசி முடித்தவுடன் சொன்னால் நன்றாக இருக்கும். எங்கள் இதயத்தில் நாங்கள் நிலையாக வைத்திருக்கிறோம். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை எங்கள் கடைசி காலம் வரை எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம். படத்தைக் காட்டி ஏமாற்றுகிற பழக்கம் எங்களுக்கு இல்லை. புகைப்படத்தை வைத்திருப்பது பற்றி அமைச்சர்கள் கேள்வி கேட்பது தவறு" என்று கூறினார்.
"படத்தை வைத்து ஏமாற்றுவதாக நீங்கள் கூறுவதுதான் தவறு" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
பேரவையில் இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் - அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம் நடந்தது.
OPS position has changed, and so has his heart: Minister Rajmohan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.