மின்வாரிய இணையதள சேவைகள் முடங்கியது!
தமிழ்நாடு மின்வாரியத்தின் இணையதள சேவைகள் முடங்கியது பற்றி...
தமிழ்நாடு மின்வாரியத்தின் இணையதள சேவைகள் திங்கள்கிழமை மாலை முதல் முடங்கியுள்ளதால் மின்வாரிய சேவைகளை மக்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வாரிய இணையதளத்தின் மூலம்தான் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், வீதப்பட்டி மாற்றம், கட்டடப் பணிக்கான தாற்காலிக மின்னிணைப்பு, விவசாய மின்இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின்வாரிய இணையதளம் முடங்கி விடுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை (ஆக.10) மாலை 4 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையிலும் இணையதள சேவைகள் முடங்கியே உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
Advertisement
Advertisement
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட புகார் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் முடங்கிய மின்வாரிய இணையதளத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Electricity Board website services down!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.