FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தெளிவான திசையை காட்டும் தமிழ்நாடு பட்ஜெட்: காங்கிரஸ்

தமிழ்நாடு பட்ஜெட் தெளிவான திசையை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளது பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:58 pm IST
முதல்வர் விஜய் / தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு பட்ஜெட் தெளிவான திசையை காட்டுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளார்.

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக பட்ஜெட் காட்டுகிறது. பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் (₹710 கோடி) மற்றும் மாதிரிப் பள்ளிகள் (₹125 கோடி) மூலம் கல்வியிலும், கல்லூரி மாணவர்களுக்கான 'வெற்றி மடிக்கணினி' (₹2,000 கோடி) திட்டம் மூலம் டிஜிட்டல் கற்றலிலும், பெண்களுக்கு 'அண்ணன் சீர்' (₹812 கோடி) மற்றும் சிங்கப்பெண் படை மூலம் மகளிர் நலனிலும் தொலைநோக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள், இளைஞர் நலன், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் செய்யறிவு நகரம் 'அறிவகம்' மற்றும் திருநெல்வேலி-தூத்துக்குடி 'விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்' போன்ற அறிவிப்புகள் மனிதவள மேம்பாட்டிற்கும் தென் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் வலு சேர்க்கின்றன.

உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு (₹8,393 கோடி), 'வெற்றி மடிக்கணினி' (₹2,000 கோடி) திட்டம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தேவைகளுடன் ஒப்பிடுகையில் கவனிக்கத்தக்க அளவிலேயே உள்ளன.

வருவாய் கசிவுகளைத் தடுத்து, நிதி நிர்வாகத்தைச் சீரமைத்து, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் மனிதவளத்தில் நீண்டகால முதலீடுகளைச் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேவையான கால அவகாசம் வழங்கி, இத்திட்டங்கள் களத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamil Nadu Congress Committee President Manickam Tagore stated on Wednesday (August 5) that the Tamil Nadu budget shows a clear direction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments