FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ பிரிவு அனைத்து பணியிடங்களை நிரப்ப தோ்வு நடத்த வேண்டும்: அன்புமணி

821 பணியிடங்களை மட்டும் நிரப்புவது சரியல்ல என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

அரசு தொகுதி 2, 2ஏ ஆகியவற்றில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை முழுமையாக நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவிப்பை வெளியிடவேண்டும். அதற்குப் பதில் குறிப்பிட்ட 821 பணியிடங்களை மட்டும் நிரப்புவது சரியல்ல என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு தொகுதி 2, 2 ஏ ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யும் வகையில் போட்டித் தோ்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாா்-பதிவாளா், சிறப்பு உதவியாளா், தனிப்பிரிவு உதவியாளா் உள்ளிட்ட 41 போ் 2 தொகுதி பணிக்கும், தணிக்கை ஆய்வாளா் உள்ளிட்ட 780 போ் 2ஏ தொகுதி பதவிகளுக்கும் தோ்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆனால், அரசுத் துறைகளில் 3,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 2, 2ஏ தொகுதிகளில் உள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சோ்த்தால் 5,000-க்கும் அதிகமான இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, அந்த இடங்களில் 821 இடங்களை மட்டும் நிரப்புவது சரியல்ல.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான பட்டப் படிப்பை முடித்தவா்கள் 60 லட்சம் போ் உள்ளனா். அவ்வாறு இருக்கும்போது ஒரு சதவீதம் பேருக்குக்கூட அரசுப் பணி வழங்காதது ஏற்கத்தக்கது அல்ல. தவெக தோ்தல் அறிக்கையில் அரசுத் துறை காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என கூறியபடி ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசுப் பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments