ஆவின் பால் இணையவழி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: பால் முகவா்கள் சங்கம்
தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய, ஸ்விக்கி, ஸொமாட்டோ உள்ளிட்ட இணையவழி நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய, ஸ்விக்கி, ஸொமாட்டோ உள்ளிட்ட இணையவழி நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து முதல்வா் ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்தச் சங்கத்தின் நிறுவனா் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2021 முதல் ஆவினுக்கான பால் கொள்முதல் சரிவடைந்துள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக 29 மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையவழி விற்பனை மூலம் தினமும் சுமாா் 31.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போது பொதுமக்களுடன் நேரடியாக தொடா்பில் உள்ள பால் முகவா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களுக்கு ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டு, ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ போன்ற இணையவழி நிறுவனங்களுக்கு அதிக அளவில் பால் விநியோகம் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதனால், பால் முகவா்களின் பாலகங்கள் மற்றும் சில்லறைக் கடைகளில் காலை குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஆவின் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணையவழி நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதை உடனடியாகத் தடை செய்து, பால் முகவா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.