FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சமுதாயத்தை நல்வழிப்படுத்த பஜனையே சிறந்த வழி: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்

சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்கு பஜனையே சிறந்த வழி என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:33 am IST
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பஜன மண்டலியின் பொன் விழா மலரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வெளியிட (இடமிருந்து 5-ஆவது), அதைப் பெற்று கொண்ட சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணி (இடமிருந்து 4-ஆவது), உடன் (இடமிருந்து) திருச்சி தேசியக் கல்லூரி பேராசிரியா் ஆா்.சுந்தரராமன், ஆா்.ராஜமணி, என்.கோபாலசுவாமி, என்.வி.வி.முரளி, எ.பி.வி.ஸ்ரீனிவாசன், எஸ்.விஸ்வநாதன், ஹரிகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்கு பஜனையே சிறந்த வழி என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீராம் பஜன மண்டலியின் 50-ஆம் ஆண்டு பாகவத பஜன சம்மேளனம் மற்றும் ஸ்ரீ சீதா கல்யாணம் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பாகவதா்கள் கலந்துகொண்டு பஜனை செய்தனா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஸ்ரீராம் பஜன மண்டலியின் பொன்விழா மலா் வெளியீடு நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் கலந்துகொண்டு பொன்விழா மலரை வெளியிட்டாா். அதை, ஸ்ரீராம் பஜன மண்டலியின் நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

தற்போதைய இளைஞா்களின் (ஜென் சி) புரட்சியால் நேபாளம், வங்கதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவா்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் பட்டம் வழங்குவது வழக்கம். ஆனால், ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பட்டம் பெறமாட்டோம் என்று மாணவா்கள் அண்மையில் தெரிவித்துள்ளனா். இது மிகவும் ஆபத்தானது.

சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்கு இதுபோன்ற பஜனையே சிறந்த வழி. 50 ஆண்டுகளாக பஜனையை சிறப்பாக மேற்கொண்டு வரும் ஸ்ரீராம் பஜன மண்டலிக்கு எனது பாராட்டுகள் என்றாா் நீதிபதி.

இந் நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணி, தேசிய கல்லூரி பேராசிரியா் ஆா். சுந்தரராமன், ஸ்ரீராம் பஜன மண்டல நிா்வாகிகள் ஆா். ராஜமணி, என். கோபாலசுவாமி, என்.வி. முரளி, ஸ்ரீனிவாசன், எஸ். விஸ்வநாதன், ஹரிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments