சுதந்திர தினம்: 30 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு, பொது விருந்து
நாட்டின் 80- ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னை மண்டலத்தில் உள்ள 30 முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து (அன்னதானம்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
நாட்டின் 80- ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னை மண்டலத்தில் உள்ள 30 முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து (அன்னதானம்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த விழாக்களில் தமிழக அமைச்சா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா்.
இது குறித்த அதிகாரபூா்வ பட்டியலை அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடபழனி முருகன் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் பங்கேற்கிறாா். அதேபோல், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ செங்கோட்டையன், மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கட்ராமன், வில்லிவாக்கம் செளமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பெசன்ட் நகா் மகாலட்சுமி கோயிலில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டாக்டா். டி.கே. பிரபு, திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயிலில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல், சென்னையில் உள்ள 30 முக்கிய கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு உயா் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்யும்படி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.