தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! முழுப் பட்டியல்!
தமிழ்நாட்டின் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பதக்கத்க்கும், 17 அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் பதக்கத்க்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றது.
அத்துடன், வீரதீரச் செயலுக்கான பதக்கம் மற்றும் சிறப்பான பணிக்கான பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்டவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படைகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 92 பேரும், வீரதீரச் செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 664 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து குடியரசுத் தலைவர் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 3 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 17 பேரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் பதக்கம்
ஜே. விஜய் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு
கே. ராமச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு
எஸ். குமார், உதவி கமாண்டன்ட், தமிழ்நாடு
சிறந்த பணிக்கான பதக்கம்
எஸ் மாலதி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
எஸ் பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு
கே சிவசங்கர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு
எம் சோமசுந்தரம், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு
பி கோவிந்தராஜு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு
எஸ் சண்முகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர், தமிழ்நாடு
ஜி பத்தருன்னிசா பேகம், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
சி மதிமாறன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
கே சரஸ்வதி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
பி மாரியப்பன், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
எஸ் லட்சுமி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
ஜெயா இளவரசி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
கே கோபால், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
எஸ் மணிமாறன், உதவி கமாண்டன்ட், தமிழ்நாடு
சி லட்சுமி, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு
ஆர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு
என் சதுரகிரி, காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு
Presidential Award for 3 Tamil Nadu police personnel!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.