பணியின்போது காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு மாரடைப்பால் உயிரிழந்தது குறித்து...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பி-4 உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்தனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், குறிப்பாக, பி-4 உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சுரேஷ், நிலைமையின் அவசரத்தை உணர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்தனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, அவரை மேல் சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தி மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்திரகாந்தன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்த் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்தன் அவர்களின் மறைவுக்கு காவல்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் காவல்துறை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.