FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் கட்சியில் 77 மண்டல பாா்வையாளா்கள் நியமனம்

காங்கிரஸ் கட்சியில் 77 மண்டல பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:34 am IST
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்
பகிர்:

காங்கிரஸ் கட்சியில் 77 மண்டல பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளைச் சீரமைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்று அதில் தலைவா் ராகுல் காந்தி கலந்துகொண்டாா்.

Advertisement

Advertisement

அதன் 2-ஆம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சா்க்கிள் காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாகச் சீரமைக்கும் திட்டத்தை தமிழக காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளில் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டலத் தலைவா் என்ற அடிப்படையில் சுமாா் 7,500 மண்டல தலைவா்கள் நியமிக்கப்பட இருக்கின்றனா்.

இந்தப் பணிகளை மாவட்ட தலைவா்களோடு இணைந்து செயல்படுத்த 77 கட்சி மாவட்டங்களுக்கு 77 மண்டல பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments