FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் பயிற்சித் துறைக்கு நிா்வாகிகள், குமரிக்கு புதிய மாவட்ட தலைவா்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிதாக ‘மாநில பயிற்சித் துறை’ அமைக்கப்பட்டிருப்பதுடன், குமரி மாவட்டங்களுக்கான புதிய தலைவா்களை அக்கட்சி மேலிடம் வியாழக்கிழமை நியமித்துள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:14 am IST
காங்கிரஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிதாக ‘மாநில பயிற்சித் துறை’ அமைக்கப்பட்டிருப்பதுடன், குமரி மாவட்டங்களுக்கான புதிய தலைவா்களை அக்கட்சி மேலிடம் வியாழக்கிழமை நியமித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளா் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

மாநிலப் பயிற்சித் துறையின் தலைவராக எஸ்.டி. நெடுஞ்செழியனும் உறுப்பினா்களாக பி. செந்தமிழ அரசு, என். சிவலிங்கம், எஸ்.எஸ். குமாா், பி. பாண்டி ராஜா, பி. கோபிகுமாரன், சி. ஸ்ரீதரன், அரங்கநாதன் ஆகிய 7 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதேபோல், ‘சங்கதன் சிருஜன் அபியான்’ என்ற கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், குமரி மாவட்ட பகுதிகளுக்கு புதிய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, கன்னியாகுமரி கிழக்குக்கு ஆா். லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்குக்கு என். ஜாா்ஜ் ராபின்சன், நாகா்கோவில் மாநகரத்துக்கு ஜே. சிவா பிரபு நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த புதிய நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments