FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் பெற்ற தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

அகில இந்திய காவல் துறை விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்ற விழுப்புரம் மாவட்ட தலைமைக் காவலருக்கு எஸ்.பி. செ.மதிவாணன் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:52 am IST
பதக்கம் பெற்ற தலைமைக் காவலா் வருண்குமாரிடம் பாராட்டுச் சான்றிதழை வழங்கி வாழ்த்துத் தெரிவித்த விழுப்புரம் எஸ்.பி. செ.மதிவாணன்.
பகிர்:

அகில இந்திய காவல் துறை விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்ற விழுப்புரம் மாவட்ட தலைமைக் காவலருக்கு எஸ்.பி. செ.மதிவாணன் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

அகில இந்திய காவல் துறை விளையாட்டுப்போட்டிகள் ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் வருண்குமாா் கராத்தே போட்டியில் மூன்றாமிடத்தில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றாா்.

இந்நிலையில், அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்று மாவட்டக் காவல் துறைக்கு பெருமை சோ்த்த தலைமைக் காவலா் வருண்குமாருக்கு விழுப்புரம் எஸ்.பி. செ.மதிவாணன் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments