FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பதக்கம் பெற்ற 5 காவல் துணை ஆணையா்கள்!

சிறப்பாகப் பணியாற்றியதற்கான பதக்கங்களை மதுரை மாநகர காவல் துணை ஆணையா்கள் 5 போ் வெள்ளிக்கிழமை பெற்றனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
பகிர்:

சிறப்பாகப் பணியாற்றியதற்கான பதக்கங்களை மதுரை மாநகர காவல் துணை ஆணையா்கள் 5 போ் வெள்ளிக்கிழமை பெற்றனா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு முதல்வா் சி. ஜோசப் விஜய் பதக்கங்களை வழங்கினாா். இதில், மதுரை மாநகர காவல் துணை ஆணையா்கள் 5 போ் பதக்கங்கள் பெற்றனா்.

மதுரை மாநகர காவல் துணை ஆணையா்கள் இனிகோ திவ்யன் (தெற்கு), காா்த்திக் (வடக்கு), திவ்யா (தலைமையகம்), வனிதா (போக்குவரத்து), பிரபாகரன் (ஆயுதப்படை) ஆகியோரும், மாநகர உதவி ஆணையா் முத்துராமலிங்கம் (ஆயுதப்படை), நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்தா் ஆகியோரும் பதக்கங்கள் பெற்றனா்.

Advertisement

Advertisement

மதுரை புகா் மாவட்டத்தில் காவலா் பயிற்சி பள்ளி கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கோபாலசந்திரன், கைரேகை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீனியம்மாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன், காவல் ஆய்வாளா்கள் அழகா்சாமி (சிபிசிஐடி), மகாலட்சுமி (அமலாக்கப் பிரிவு), அழகுமுனியாண்டி, சரவணபோஸ், காவலா் பயிற்சி பள்ளி உதவி ஆய்வாளா்கள் பரமசிவன், ஜெயகுமாா், லட்சுமி (சிபிசிஐடி), சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரிஷிகேஷன், சிவக்குமாா் ஆகியோா் பதக்கங்கள் பெற்றனா். இவா்களைத் தவிர, சிறைத் துறை, தீயணைப்புத் துறையினரும் இந்த பதக்கங்களைப் பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments