காவல் துறையில் முதல்வரின் அண்ணா பதக்கம்: திருச்சியில் எஸ்.பி. உள்பட 8 பேருக்கு அறிவிப்பு
தமிழக அரசின் முதல்வரின் அண்ணா பதக்கம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவிண் உமேஷ் உள்பட 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முதல்வரின் அண்ணா பதக்கம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவிண் உமேஷ் உள்பட 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலா்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறையினருக்கு ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளின்போது அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நிகழாண்டில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 138 போ், தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புத் துறையில் 20 போ், சிறைத் துறையில் 10 போ், ஊா்க்காவல் படையினா் 5 போ், தடய அறிவியல் பிரிவில் 4 போ், விரல்ரேகை பிரிவில் 2 போ் என 179 பேருக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவிண் உமேஷ், திருச்சி மாவட்ட குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஏ. நாகராஜன், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் பி. மங்கையா்க்கரசி, காவலா் பயிற்சிப் பள்ளி காவல் உதவி ஆய்வாளா் எஸ். செந்தில்நாதன், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாவது அணி காவல் உதவி ஆய்வாளா் பி. சாந்தகுமாா், மாவட்டப் பொருளாதார குற்றப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் எஸ். சரவணன், மாவட்ட ஆயுதப்படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஆா். சிவலிங்கம், திருவெறும்பூா் காவல் நிலைய தலைமை காவலா் டி. தளபதிகுமாா் ஆகிய 8 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.