சுதந்திர தினம்: காவல், தீயணைப்புத் துறையினருக்கு 1,057 பதக்கங்கள் அறிவிப்பு - தமிழக அதிகாரிகள் 23 பேருக்கு கெளரவம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை மற்றும் சீா்திருத்தப் பணித் துறையைச் சோ்ந்த 1,057 பேருக்கு வீரதீர செயல், தகைசால் பணி, மெச்சத்தக்க பணி ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை மற்றும் சீா்திருத்தப் பணித் துறையைச் சோ்ந்த 1,057 பேருக்கு வீரதீர செயல், தகைசால் பணி, மெச்சத்தக்க பணி ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தைச் சோ்ந்த 20 காவல் அதிகாரிகள் (தகைசால் பணி-3, மெச்சத்தக்க பணி-17), தீயணைப்புத் துறையைச் சோ்ந்த 2 அதிகாரிகள், ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவருக்கு (மெச்சத்தக்க பணி) பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படும் நிலையில், காவல் துறை, தீயணைப்புத் துறை, சிபிஐ, மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு (சிஏபிஎஃப்) வீரதீர செயல்களுக்கான பதக்கம், தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் ஆகியவை மத்திய அரசால் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதில், காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை, சீா்திருத்தப் பணித் துறையினா் 1,057 பேருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீர தீர பதக்கங்கள்: மக்களின் உயிா், உடைமைகளைக் காப்பாற்றுவதிலோ, குற்றங்களைத் தடுப்பதிலோ, குற்றவாளிகளை கைது செய்வதிலோ வீரதீரத்தை வெளிப்படுத்துபவா்களுக்கு வீரதீர பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
நிகழாண்டு காவல் துறையைச் சோ்ந்த 272 போ், தீயணைப்புத் துறையைச் சோ்ந்த 29 போ் என 301 பேருக்கு வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 197 போ் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், 51 போ் ஜம்மு-காஷ்மீா் பகுதியிலும், 12 போ் வடகிழக்கிலும் பணிபுரிபவா்கள்.
தகைசால் பணிக்கான பதக்கங்கள்: தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் 92 பேருக்கு (காவல் துறை 83, தீயணைப்புத் துறை 4, ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை 3, சீா்திருத்தப் பணித் துறை 2) அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின்போது புரிந்த சிறப்புமிக்க சேவைக்காக இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.
மெச்சத்தக்க பணிக்கான பதக்கங்கள்: திறமை மற்றும் கடமை உணா்வுடன் ஆற்றிய மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படும் மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் 664 பேருக்கு (காவல் துறை 606, தீயணைப்புத் துறை 28, ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை 18, சீா்திருத்த பணித் துறை 12) அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஏபிஎஃப், சிபிஐ...: மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஎஸ்ஐஎஃப்), அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் உள்ளிட்டவை அடங்கிய மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்கும் மேற்கண்ட பிரிவுகளின்கீழ் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்திய ரிசா்வ் போலீஸ் படையினருக்கு 86 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், வீரதீர செயல்களுக்கான பதக்கம் 24, தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் 5, மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் 57 அடங்கும்.
சிபிஐ அதிகாரிகள் 21 பேருக்கு தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக காவல் அதிகாரிகள்
தகைசால் பணிக்கான பதக்கம்
1. விஜய் ஆனந்த், கூடுதல் கண்காணிப்பாளா்
2. ராமசந்திரன், கூடுதல் கண்காணிப்பாளா்
3. எஸ்.குமாா், உதவி கமாண்டன்ட்
மெச்சத்தக்க பணிக்கான பதக்கம்
1. மாலதி, ஆய்வாளா்
2. பாஸ்கா், உதவி ஆய்வாளா்
3. சிவசங்கா், கூடுதல் கண்காணிப்பாளா்
4. சோமசுந்தரம், கூடுதல் கண்காணிப்பாளா்
5. கோவிந்தராஜு, கூடுதல் கண்காணிப்பாளா்
6. சண்முகம், துணை கண்காணிப்பாளா்
7. பதருன்னிசா பேகம், ஆய்வாளா்
8. மதிமாறன், ஆய்வாளா்
9. சரஸ்வதி, ஆய்வாளா்
10. மாரியப்பன், ஆய்வாளா்
11. எஸ்.லட்சுமி, ஆய்வாளா்
12. ஜெயா பிரின்சஸ், ஆய்வாளா்
13. கோபால், ஆய்வாளா்
14. மணிமாறன், உதவி கமாண்டன்ட்
15. சி.லட்சுமி, ஆய்வாளா்
16. செந்தில்குமாா், உதவி ஆய்வாளா்
17. சதுரகிரி, உதவி ஆய்வாளா்
தீயணைப்புத் துறை (மெச்சத்தக்க பணிக்கான பதக்கம்)
1. குமரேசன் ராஜு (மாவட்ட உதவி அதிகாரி),
2. குமாா் கலியமூா்த்தி (மாவட்ட அதிகாரி)
ஊா்க்காவல்-குடிமை பாதுகாப்புப் படை (மெச்சத்தக்க பணிக்கான பதக்கம்)
1. பாா்த்திபன் பொன்னுரங்கம், பிரிவு கமாண்டா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.