FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.17) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
பகிர்:

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.17) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக திங்கள்கிழமை ( ஆக.17), மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பிற தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.18), ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 102.56, மதுரை விமான நிலையம் - 102.2, கரூா் பரமத்தி - 101.3, பாளையங்கோட்டை - 100.58, ஈரோடு, திருத்தணி தலா - 100.4, நாகை - 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

மழை பதிவு: தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 40 மி.மீட்டா் மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments