FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இளைஞர்கள் வாக்களித்த ஆட்சி; ஆனால், அவர்களின் எதிர்காலம்? - பிரேமலதா பதில்!

தவெகவின் 100 நாள் ஆட்சி எப்படியிருக்கிறது? என்ற கேள்விக்கு பிரேமலதா அளித்த பதில் பற்றி...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 7:37 pm IST
முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

இளைஞர்கள் வாக்களித்த ஆட்சி; ஆனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை (ஆக. 17) பேசியுள்ளார்.

தவெகவின் 100 நாள் ஆட்சி எப்படியிருக்கிறது? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்து பேசியதாவது:

100 நாள்கள் கடந்திருக்கிறது அவ்வவுதான். வேறொன்றும் இல்லை. மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், அதேதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த மாற்றமும் எனக்குத் தெரியவில்லை.

Advertisement

Advertisement

ஏனென்றால், கஞ்சாவால் பாதிக்கப்பட்டதால், மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு உயிரிழந்து விட்டார்கள். ஒன்று அமுதன், மற்றொன்று தனுஷ். இதுவே ஒரு உதாரணம். இதைவிட சொல்ல என்ன இருக்கிறது?

மாற்றம் என்று சொல்லி வந்தால் என்ன மாற்றம்? தமிழ்நாடு முழுக்க திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு இடங்களில் பாலியல் குற்றங்கள் பெருகியிருக்கிறது.

நாங்கள் சட்டப்பேரவைக்கு வராத இந்த நான்கு நாள்களில் நடைபெற்ற விஷயங்களைத்தான் சொல்கிறேன். அத்தனைப் பாலியல் வன்கொடுமைகள் தமிழ்நாடு முழுக்க நடந்துள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது. இதற்குக் காரணம் கஞ்சா மற்றும் போதை கலாசாரம். இளைஞர்கள்தான் வாக்களித்து இந்த ஆட்சியைக் கொண்டு வந்திருகிக்கிறார்கள். ஆனால், அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறதுதான் உண்மை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

summary

DMDK General Secretary Premalatha Vijayakanth stated on Monday (Aug. 17) that although the youth voted for the current government, their future remains uncertain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments