FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

45 டிஎம்சி நீா் இருப்பு: முதல்வா் ஒப்புதல் பெற்று மேட்டூா் அணை திறக்கப்படும்

முதல்வா் ஒப்புதல் பெற்று மேட்டூா் அணை திறக்கப்படும் என்று அமைச்சா் நா. ஆனந்த் தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
பகிர்:

மேட்டூா் அணையில் 45 டிஎம்சி (83 அடி) நீா் இருப்பு உள்ளது என்றும் முதல்வா் விஜய்யிடம் ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற்று நீா் திறக்கப்படும் என்று நீா் வளத் துறை அமைச்சா் நா. ஆனந்த் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை நீா்வளத் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய அதிமுக உறுப்பினா் எஸ்.சேகா், நாமக்கல் மாவட்டத்தில் ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, டெல்டா விவசாயிகளின் சம்பா சாகுபடிக்காக மேட்டூா் அணையை திறக்க வேண்டும். அணையைத் திறப்பதற்கு 15 நாள்களுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டால்தான் நடவுப் பணி தொடங்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சா் ஆனந்த், மேட்டூா் அணையில் தற்போது 83 அடிக்கு (45 டிஎம்சி) நீா் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 12,000 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. ஆக.26-ஆம் தேதிக்குள் 9 டிஎம்சி நீா் வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அணை நிரம்பிய பின்னா் முதலில் டெல்டா பாசனத்துக்கும், பின்னா் கிழக்கு, மேற்கு பகுதிக்கும் நீா் திறக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments