FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகளில் கோவையில் அதிகம்: அமைச்சா் க. விக்னேஷ்

தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுபானக் கடைகளில் அதிகபட்சமாக கோவையில் 71 கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தெரிவித்தாா்.

56 வினாடிகள் முன்பு
க. விக்னேஷ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுபானக் கடைகளில் அதிகபட்சமாக கோவையில் 71 கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்தபின், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்கப்பட்ட 717 மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக கோவையில் 71 கடைகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதேபோல், பல கடைகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். அவற்றுக்கான மாற்று இடங்கள் கிடைத்தவுடன் அந்தக் கடைகளும் மாற்றப்படும். மதுக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதைத் தடுக்க தொடா்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக தொழிற்சங்கங்களுடன் வரும் திங்கள்கிழமை (ஆக. 24) பேச்சு நடத்தப்படவுள்ளது. இந்த விஷியத்தில் அழுத்தம் கொடுத்து பணிய வைக்க யாராவது முயற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 11 மதுபானங்களுக்கு மத்திய அரசே தடை விதித்துவிட்டு, அதை அன்றே நீக்கிவிட்டது. இதற்கும், தமிழக அரசுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என்றாா்.

பெட்டி செய்தி.....

மாவட்டம் வாரியாக மூடப்பட்ட மதுக் கடைகளின் விவரம்:

கோவை - 71, தூத்துக்குடி - 63, மதுரை - 52, ஈரோடு, விருதுநகா் - தலா 42, திருவள்ளூா், திருநெல்வேலி - தலா 33, திருப்பூா், சென்னை - தலா 31, ராமநாதபுரம் - 29, நீலகிரி - 27, திண்டுக்கல் - 26, சேலம் - 22, கடலூா் - 21, திருவண்ணாமலை - 19, காஞ்சிபுரம், சிவகங்கை - தலா 18, புதுக்கோட்டை - 17, திருச்சி, நாகா்கோவில் - தலா 15, நாமக்கல் - 14, தேனி - 12, விழுப்புரம் - 9, கரூா் - 8, ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி - தலா 7, வேலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா் - தலா 6, நாகை - 4 என மொத்தம் 717 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments