FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில், தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம்! முதல்வர் விஜய் வலியுறுத்தல்

நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில், தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை வலியுறுத்தி முதல்வர் விஜய் பேச்சு

தென் மண்டலக் குழு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சு
பகிர்:

நீட் விலக்கு, ஒசூரிலிருந்து பெங்களூர் மெட்ரோ ரயில் நீட்டிப்பு, தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழு கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று பேசினார்.

கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், கேரள முதல்வா் வி.டி.சதீசன், தெலங்கானா துணை முதல்வா் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் விஜய், தென்மாநிலங்களுக்கு நிதி செலவீன சுயாட்சி அதிகாரம் தேவை என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 125 அடியாக உயர்த்த வேண்டும். தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும். போதைப் பொருள்களைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தினார் முதல்வர் விஜய்.

மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் மாநிலங்களை வலியுறுத்த வேண்டும்.

பெங்களூரு மெட்ரோவை ஒசூரிலிருந்து நீட்டிக்க வேண்டும். இதனால், தமிழகம் - கர்நாடகம் என இரு மாநில மக்களுக்கும் பயன் ஏற்படும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

summary

Exemption from NEET, Metro rail from Hosur, and representation for southern states! Chief Minister Vijay urges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments