FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புகைப்படக் கலைஞர்களை படம்பிடித்த முதல்வர் விஜய்! நெகிழ்ச்சியான விடியோ!

புகைப்படக் கலைஞர்களை படம்பிடித்த முதல்வர் விஜய்யின் உற்சாக விடியோ வெளியாகி

37 வினாடிகள் முன்பு
பகிர்:

உலகப் புகைப்பட நாளை முன்னிட்டு, புகைப்படக் கலைஞர்களை விடியோ மற்றும் படம் எடுத்து வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்யின் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

எப்போதும் புகைப்படக் கருவிகளுக்குப் பின்னல் இருந்துகொண்டு, பலரையும் கேமரா வெளிச்சத்தின் மூலம் உலகப் பார்வைக்குக் கொண்டு வருபவர்கள்தான் புகைப்படக் கலைஞர்கள். ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட நாள் என்பதால், அதனை முன்னிட்டு, பத்திரிகை புகைப்பட கலைஞர்களை தலைமைச் செயலகம் வரவழைத்து அவர்களை படம்பிடித்தார் முதல்வர் விஜய்.

சிரித்தபடியும், புன்னகைத்துக்கொண்டும், திடீரென புகைப்பட லென்ஸ் முன்னால் தோன்றியதால் சற்று வெட்கத்துடன் வந்த புகைப்படக் கலைஞர்களை சுற்றி சுற்றி விடியோ பதிவு செய்து அவர்களுக்கும் காட்டி உற்சாகப்படுத்தினார்.

Advertisement

Advertisement

மேலும், புகைப்படக் கலைஞர்கள், முதல்வர் விஜய்க்கு கொடுத்த புகைப்படத்தை அன்புப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, புகைப்படக் கருவிகளின் வகைகளையும் கேட்டறிந்தார்.

அவர்கள் காட்டிய பழைய புகைப்படங்கள், பிலிம்களையும் முதல்வர் விஜய் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்.

வழக்கமாக, உலக புகைப்பட நாளில், முதல்வரை பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள். அன்றைய தினம் எடுக்கப்படும் புகைப்படம் ஆவணமாக இருக்கும். ஆனால், எப்போதும் ஆவணமாக இருக்கும் ஒரு புகைப்பட நிகழ்வை, கலைஞர்களின் உற்சாக நாளாக மாற்றியிருக்கிறார் முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments