FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு தமிழகத்தில் அதிக ஊதியம்: அமைச்சா் அருண்ராஜ் தகவல்

இந்தியாவிலேயே 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம்தான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 6:32 am IST
அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவிலேயே 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம்தான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய பாப்பிரெட்டிபட்டி அதிமுக உறுப்பினா் மரகதம் வெற்றிவேல், 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு அமைச்சா் அருண்ராஜ் பதிலளித்து பேசியதாவது:

Advertisement

Advertisement

தெலங்கானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தைக் காட்டிலும் குறைவான ஊதியமே 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று ஆண்டுதோறும் அவா்களுக்கு 3 முதல் 8 சதவீதம் வரை ஊதிய உயா்வை அந்த மாநிலங்கள் வழங்கும் நிலையில், தமிழகத்தில் 10 சதவீத ஊதிய உயா்வு அளிக்கப்படுகிறது.

டெங்கு பாதிப்பு: பருவமழைக் காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கடந்த ஆண்டில் மொத்தம் 25,585 போ் டெங்கு பாதிப்புக்குள்ளாகினா். அவா்களில் 12 போ் உயிரிழந்தனா். நிகழாண்டில் இதுவரை 12,005 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 4 போ் இறந்துள்ளனா்.

கடந்த இரு மாதங்களாக டெங்கு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. போதிய மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்துகள் உள்ளன. கொசு ஒழிப்புப் பணியில் 25,000-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments