தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்! ஜோதிடர் ரத்தன் பண்டிட்
தவெகவுக்கு பெயர் வைத்தது குறித்து ஜோதிடர் ரத்தன் பண்டிட் பேசியது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெயர் வைத்தது நான்தான் என்று அக்கட்சியின் நிர்வாகியும் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இலட்சினை வெளியீட்டு விழாவில் ரத்தன் பண்டிட் வியாழக்கிழமை கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
“வெற்றி என்ற பெயரை நான்தான் தேர்வு செய்து கொடுத்தேன். 22 நம்பர் பெயர் இது. தோனி, கங்குலி ஆகிய பெயர்கள் எல்லாம் 22-ல்தான் வரும். வெற்றி என்றால் முருகன். அதனால்தான் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெற்றி என பெயர் வைத்தேன்.
தவெகவுக்கு பெயர் வைத்தது நான். இன்று முதல்வராக விஜய் அமர்ந்துள்ளார். வெற்றி தொலைக்காட்சியின் இலட்சினையும் (லோகோ) நான்தான் வைத்து கொடுத்தேன். விஜய்க்கு பொருந்தக்கூடிய நிறத்தில் இலட்சினையை வடிவமைத்தேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரத்தன் பண்டிட்டை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், ரத்தன் பண்டிட் நியமன ஆணையத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
I was the one who named TVK! Astrologer Radhan Pandit
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.