மாமல்லன் நீா்த்தேக்கத்துக்கு ஆலத்தூா் ஏரியில் இருந்து மண் அள்ள தடை கோரிய வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு
மாமல்லன் நீா்த்தேக்கத்துக்கு கரை அமைப்பதற்காக ஆலத்தூா் பெரிய ஏரியில் மண் அள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீா்வளத்துறைச் செயலா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாமல்லன் நீா்த்தேக்கத்துக்கு கரை அமைப்பதற்காக ஆலத்தூா் பெரிய ஏரியில் மண் அள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீா்வளத்துறைச் செயலா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆலத்தூா் ஏரி நீரினை பயன்படுத்துவோா் நலச் சங்கத்தின் தலைவா் கே.ஆலைவா்மன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் மாமல்லன் நீா்த்தேக்கம் கட்ட, கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நீா்த்தேக்கத்துக்கு கரை அமைப்பதற்காக, ஆலத்தூா் ஏரியில் இருந்து மண்எடுக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் தாலுகாவில் அமைந்துள்ள ஆலத்தூா் பெரிய ஏரி, எங்கள் கிராமத்தின் குடிநீா் ஆதாரமாகவும், 200 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்குப் பாசனவசதியையும் வழங்குகிறது.
உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும், கிராம மக்களுடன் கலந்து ஆலோசிக்காமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆலத்தூா் பெரிய ஏரியில் இருந்து மண் எடுத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து விலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளது. எனவே, ஆலத்தூா் பெரிய ஏரியில் இருந்து மாமல்லன் நீா்த்தேக்கத்துக்கு கரை அமைக்க, மண் எடுக்க தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நீா்வளத்துறைச் செயலா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், நீா்வளத்துறை உதவி செயற் பொறியாளா் மற்றும் ஆலத்தூா் கிராம ஊராட்சித் தலைவா் ஆகியோா்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.