FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்- அமைச்சர் ரமேஷ்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர் ரமேஷ் பேட்டி அளித்திருப்பது பற்றி....

தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் - TN Assembly
பகிர்:

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தகாத வார்த்தைகளை பேசுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என சட்டப்பேரவை உறுப்பினர் கே.என் நேரு கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல இடங்களில் பொது மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதனையெல்லாம் சரிசெய்து தரமான பொருட்களை வழங்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திமுககாரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரிலீஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும், முதன்முறையாக சட்டப்பேரவை வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம். மக்கள் பிரச்னை பற்றி முன்வைக்கிறோம். எதிர்த்தரப்பின் கருத்துக்கும் பதில் சொல்லுகிறோம்.

Advertisement

Advertisement

ஆனால் இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தற்போதைய அமைச்சர்கள் பேசும்போது தகாத வார்த்தைகளில் பேசுவது சட்டப்பேரவையை சண்டை நடத்தும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும்.

நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டப்பேரவையில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபு, கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள்.

இந்த ஆட்சியில் ஜனநாயகம் முக்கிய பங்காற்றுகிறது என்பதால் இதுபோன்று நேரிடுகிறது. பேரவைத் தலைவர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்றார்.

summary

Minister Ramesh has accused some former ministers of using inappropriate/abusive language in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments