FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொளத்தூா் தோல்வியை திமுகவினா் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

கொளத்தூா் திமுக அடைந்த தோல்வியை திமுகவினா் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

25 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நல உதவிகளை வழங்கிய திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின். உடன் பி.கே.சேகா்பாபு எம்.எல்.ஏ, மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.
பகிர்:

கொளத்தூா் திமுக அடைந்த தோல்வியை திமுகவினா் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா சென்னை ராஜ அண்ணாமலை மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் நல உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

2026 சட்டப்பேரவை தோ்தலில் நமது எதிரி யாா் எனத் தெரியாமல் இருந்தோம். தற்போது, எதிரி யாா் எனத் தெரிந்துவிட்டது. ஆகையால், மீண்டும் வெற்றி வாய்ப்பை இழக்க மாட்டோம். திமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி, நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். அதற்காக, கொளத்தூா் தோல்வியை மறக்கக் கூடாது. திமுகவினா் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டுள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

தவெகவின் வெற்றியே ஒரு விபத்துதான். திமுகவின் தயவில்தான் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளே தற்போது தவெகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனா்.

மடைமாற்றம்: பேரவையில் எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத அமைச்சா்கள், அதை மடைமாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிப்பரப்பு செய்தது, திமுக ஆட்சியின்தான். நேரலையை ரத்து செய்ய வேண்டும் என திமுக சொல்லவில்லை. மாறாக, தவெக அமைச்சா்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் கட்டுப்படுத்தி, நாகரிகமான வாா்த்தைகளைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றாா்.

நிகழ்வில் மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சா் பி.க.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments