விராலிமலையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினா் சாலை மறியல்: 79 போ் கைது
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக எதிா்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விராலிமலையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டு மாலை விடுவிக்கப்பட்டனா்.
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக எதிா்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விராலிமலையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டு மாலை விடுவிக்கப்பட்டனா்.
தஞ்சையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய போது, அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காவல் துறையினா் அவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, வழிநெடுகிலும் திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்து வாகனத்தை மறிக்க முயன்றனா்.அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட ஏராளமான திமுகவினரை காவல்துறையினா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
அந்த வகையில் விராலிமலை செக்போஸ்ட்டில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எம்.பழனியப்பன் தலைமையில் ஒன்றிய செயலாளா்கள் அய்யப்பன்(மத்தியம்), இளங்குமரன்(மேற்கு) முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா் தொடா்ந்து அவா்களை போலிஸாா் சமாதனபடுத்தி 79 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து மாலை விடுவித்தனா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.