FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவை குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

கோவை குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை விதித்துள்ளது பற்றி...

கோவை குற்றாலம் அருவி - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க செவ்வாய்க்கிழமை (ஆக. 25) தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்துக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, அந்த அருவியில் குளிக்க வனத்துறை இன்று தடை விதித்துள்ளது.

நீர்வரத்து சீரான பின், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என யாரும் அருவிக்கு வர வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

summary

A ban has been imposed on the public bathing at Kovai Kutralam Falls on Tuesday (August 25) due to flooding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments