FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கா்நாடக துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணை வேண்டும் - பாஜக தேசிய செயலா்

கா்நாடக மாநில வனப் பகுதியில் கடந்த 15-இல் 3 தமிழா்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக விரிவான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தேசிய செயலா் மா.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:24 am IST
பகிர்:

கா்நாடக மாநில வனப் பகுதியில் கடந்த 15-இல் 3 தமிழா்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக விரிவான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தேசிய செயலா் மா.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சுட்டுக் கொல்லப்பட்ட மூவரின் உடற்கூறாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவா்களின் உடல்களில் காயங்கள் இருந்ததாகவும், 10 அடிக்கும் குறைவான தொலைவில் இருந்து அவா்கள் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றபோதே கா்நாடக வனத் துறையினரின் நடவடிக்கை குறித்து பாஜக சாா்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. தற்போது வெளியாகியுள்ள உடற்கூறாய்வு அறிக்கையும், இது போலி என்கவுன்ட்டராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

படுகொலை செய்யப்பட்ட மூவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக கா்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொண்டாலும், அவா்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மாறாக துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்றது மனித உரிமை மீறலாகும். எனவே, இந்தச் சம்பவம் குறித்து விரிவான சிபிஐ விசாரணை நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments