கர்நாடக அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும்: நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்
கர்நாடக அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என நயினார் நகேந்திரன் வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...
கா்நாடகத்தில் வனத் துறையால் 3 தமிழா்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா வனப்பகுதியில், மான்களை வேட்டையாடியதாகக் கூறி, ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மூன்று தமிழர்களை, கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கர்நாடக அரசு கூறுவதை போல, ஒருவேளை அவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது தான் வனத்துறையினரின் பணியே தவிர, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கொடூரமாக அவர்களை இப்படி தண்டிப்பது அல்ல. அதிலும், சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்களும், விவசாயிகள் எனவும், பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வனத்துறையினர் அவர்களை அநியாயமாக கொலை செய்துவிட்டதாகவும் அவர்களது உறவினர்கள் கதறுவதைப் பார்த்தால், கர்நாடக அரசின் மீது கனத்த சந்தேகம் எழுகிறது.
Advertisement
Advertisement
எனவே, தமிழக முதல்வர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசால் தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதுமட்டுமன்றி தமிழக அரசின் சார்பாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Justice demanded for Tamils shot dead by the Karnataka government: Nainar Nagendran urges
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.