FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பற்றிய அவதூறு: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 9:49 pm IST
விஜய், குஷ்பு, நயினார் நாகேந்திரன்
பகிர்:

தமிழக முதல்வர் விஜய் பற்றி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் பற்றி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் அவர் பேசியது தவறாகத் திரிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாஜக துணைத் தலைவர் குஷ்பு நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பு வெளியிட்ட பதிவில், ”தமிழக முதல்வரின் தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய தரக்குறைவான கருத்து மிகவும் அருவருப்பானது. இதுபோன்ற கருத்துகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

எனது தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி எப்போதும் பெண் சக்தி பற்றிப் பேசி வருகிறார். அவர் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற கருத்துகளை வெளிப்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான ஒன்று.

பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்குள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன்.

இன்று அவர் பேசியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க எப்போதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.

ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டும். ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகிற்கு வந்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இதுபோன்ற அவமரியாதை மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்

summary

Defamatory remarks about Chief Minister Vijay: Khushbu condemns Nainar Nagendran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments