பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு!
முதல்வர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகப் பேச்சு...
முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி அநாகரிகமாகப் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இன்று சென்னையில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
"சட்டப்பேரவையில் 'அப்பா எங்கே, அப்பா எங்கே' என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். சட்டப்பேரவையில் அப்பாவைத் தேடினால் யாருக்கு தெரியும்?" என்று பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில் பேரவையில் முதல்வர் விஜய், "எங்க, அப்பாவைக் காணோம்" என்று பேசியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இப்போது முதல்வர் விஜய்யின் குடும்பத்தை அநாகரிகமாகப் பேசியதற்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Nainar nagendran makes uncivilized remarks about Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.