பரந்தூர் விமான நிலையம்: திமுக ஆட்சியில் நிபுணர் குழுவின் அறிக்கையை மூடி மறைத்தது ஏன்? - பெ. சண்முகம் கேள்வி!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சியில் மூடி மறைத்தது ஏன்? என்று பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளதைப் பற்றி...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சியில் மூடி மறைத்தது ஏன்? என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தன.
விமான நிலையம் திட்டம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 1,200 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பிணை தெரிவித்து வந்தனர்.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவக்கிய பின்னர் முதல் களப்பணியாக ஏகநாதபுரம் போராட்ட களத்திற்கு சென்ற விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும் என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், ஏகனாபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சியில் மூடி மறைத்தது ஏன்? என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?” என்றும் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), has questioned why the DMK government suppressed the report of the expert committee constituted to study the establishment of the Parandur airport.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.