விஜய் ஆட்சியின் 100 நாள்கள் எப்படி? பதிலளிக்காமல் சிறு புன்னகையுடன் கடந்து சென்ற ரஜினி!
விஜய் ஆட்சியின் 100 நாள்கள் எப்படி? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சிறு புன்னகையுடன் கடந்து சென்ற ரஜினியின் விடியோ
நீண்ட அறிக்கை வெளியிட்டு செய்ய முடியாத ஒரு சலசலப்பை, ஒரு சிறு புன்னகை செய்துவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி, பொறுப்பேற்று 100 நாள்கள் கடந்திருக்கும் நிலையில், அது பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ரஜினிகாந்த் அளித்த ரியாக்சன்தான் இன்று பேசுபொருளாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றி தமிழக வெற்றி கழகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்ததாகக் காணவில்லை.
அதேவேளையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்த்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ”வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்” என்று ரஜினி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து, தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்து ரஜினி சொன்ன கருத்துகளும் பேசுபொருளாக மாறியிருந்ததால், ரஜினி தனது கருத்துகளை வெளியிடுவதில் அதிருப்தியடைந்திருந்ததாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், ரஜினிகாந்த்தைப் பார்த்ததும் ஓடிச் சென்ற செய்தியாளர்கள், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளன. இது பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதனைக் கேட்டதும் ரஜினிகாந்த், பதில் ஏதும் சொல்லாமல், புன்னகைத்துவிட்டு அந்த செய்தியாளர்களை அமைதியாகக் கடந்து சென்று காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
இவ்வாறு அவர் புன்னகையை பதிலாகக் கொடுத்துவிட்டுச் சென்றதைப் பார்த்த அவரது ரசிகர்களுக்கும், தவெக ஆதரவாளர்களுக்கும் மூளைக்குள் ஒரு மிக்ஸியே ஓடுகிறது. ரஜினிகாந்த் என்ன நினைக்கிறார், ஏன் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார் என்று பலவாறு சிந்தனைகள் எழுகின்றன.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவரவர் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு வசதியாக்கியிருக்கிறது.
How have the first 100 days of Vijay's administration been? Rajini walked past with a faint smile, without offering a reply.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.