4 கிலோவாட் வரை வீட்டு மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: மின் வாரியம்
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் 4 கிலோவாட் வரை உள்ள புதிய வீட்டு மின் இணைப்புகளுக்கு, விரிவாக்கம் அல்லது மேம்பாட்டுப் பணிகள் தேவையில்லாத நிலையில், இனி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய நடைமுறை வரும் ஆக. 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் 4 கிலோவாட் வரை உள்ள புதிய வீட்டு மின் இணைப்புகளுக்கு, விரிவாக்கம் அல்லது மேம்பாட்டுப் பணிகள் தேவையில்லாத நிலையில், இனி கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய நடைமுறை வரும் ஆக. 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடா்பாக அனைத்து தலைமைப் பொறியாளா்கள், மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களுடன், மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் ஜிபிஎஸ் இருப்பிடக் குறியீடுகளை விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும்.
ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாகச் சமா்ப்பிக்கக் கூடாது. மேலும், விண்ணப்பதாரா் அளிக்கும் ஜிபிஎஸ் தகவல்கள் ஜிஐஎஸ் செயலி மூலம் சரிபாா்க்கப்படும்.
Advertisement
Advertisement
தகவல்கள் சரியாக இருந்தால் கள ஆய்வு இல்லாமல் விண்ணப்பம் அடுத்தகட்டத்துக்கு அனுப்பப்படும். சரிபாா்ப்பில் தோல்வி ஏற்பட்டால், வழக்கமான கள ஆய்வு நடைமுறை மேற்கொள்ளப்படும்.
ஜிபிஎஸ் சரிபாா்ப்பு முடிந்ததும், மதிப்பீடு செய்யப்பட்டு, மின் இணைப்பு வழங்கும் பணியின்போது மீட்டா் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜிபிஎஸ் தகவலும் பதிவு செய்து சரிபாா்க்கப்படும். பின்னா் மீட்டா் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்படும்.
விண்ணப்பத்தின் நிலை மற்றும் மாற்றங்கள் குறித்த தகவல்களும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும். இந்தப் புதிய நடைமுறை ஆக. 28 முதல் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டும் பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.